தோல்விப்பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சரத்குமார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
சட்டப்பேரவைத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடுவதற்கு ஜனநாயக உரிமை உள்ளது. தோல்விப்பயத்தில் எதிர்க்கட்சிகளை ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது. நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன்.
பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் எதிர்பார்க்கும் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர வேண்டும். அதிமுக- பாரதிய ஜனதா கட்சி இடையே கூட்டணி அமைவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார்.கூட்டணி எந்த அளவில் உருவாகிறது, எந்த கொள்கையின் அடிப்படையில் உருவாகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் தான் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொரும் இணைந்து கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி எப்படியிருக்கும்.
அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. எனவே வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இக்கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார் சரத்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


